
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதன் மின்னணு சேவை (e-service) தளத்தைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வரி செலுத்துபவர்கள் நிறுவனங்களுக்கான வருமான வரி (CIT), பங்காண்மை வருமான வரி (PIT) மற்றும் தனிநபர் வருமான வரி (IIT) ஆகியவற்றை, எளிமைப்படுத்தப்பட்ட IIT விருப்பம் உட்பட, இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க முடியும்.
வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக நவம்பர் 30, 2026 திகதியைத் திணைக்களம் நிர்ணயித்துள்ளது. குறித்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே வரி செலுத்துபவர்கள் தமது அறிக்கைகளை மின்னணு முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ird.gov.lk இல் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments