Trending

6/recent/ticker-posts

Live Radio

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (2026) விண்ணப்பங்கள் கோரல்: ஜூலை 23 வரை மாத்திரமே அவகாசம்...!



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (2026) விண்ணப்பப் படிவங்களை, ஜூலை மாதம் 03ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களும் அந்தந்த பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.lk/eic ஆகிய தளங்களுக்குள் பிரவேசித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments