
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 2,604 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகூடிய எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இது மொத்த தொற்றுகளில் 52.5 சதவீதமாகும் (32,054 நோயாளர்கள்). தென் மாகாணத்தில் 9,674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,237 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 4,823 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,979 நோயாளர்களும் மற்றும் வடமேல் மாகாணத்தில் 2,778 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். ஏனைய மாகாணங்களில் ஊவா மாகாணத்தில் 1,550 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,013 நோயாளர்களும் மற்றும் வட மாகாணத்தில் 957 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக, அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது (12,445 நோயாளர்கள்). கம்பஹா மாவட்டம் 12,282 நோயாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 4,428 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 4,092 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 3,802 நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3,588 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். காலி மாவட்டத்தில் 3,501 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் 2,557 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1,745 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் 1,649 நோயாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 1,629 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,220 நோயாளர்களும் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 1,149 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) பிரிவில் 784 நோயாளர்களும், மொனராகலை மாவட்டத்தில் 776 நோயாளர்களும், பதுளை மாவட்டத்தில் 774 நோயாளர்களும் மற்றும் யாழ்ப்பாணத்தில் 708 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை சுகாதார விஞ்ஞான தேசிய நிறுவன (NIHS) பிரிவில் 678 நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 656 நோயாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 563 நோயாளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 531 நோயாளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 482 நோயாளர்களும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 412 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 365 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் வவுனியா (94), மன்னார் (64), கிளிநொச்சி (56) மற்றும் முல்லைத்தீவு (35) ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை ஒரு மாதத்தில் அதிகூடிய எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும், அந்த மாதத்தில் மாத்திரம் 21,546 தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.



0 Comments