Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரான் மீது அமெரிக்கா ஆறாவது நாள் தாக்குதல்-7 பேர்உயிரிழப்பு...!!



ஈரான் மீது அமெரிக்கா நேற்று (16) 6ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பண்டர் இ ஹமீர் பாலத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில்,7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இத்தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்ட நிலையில், மொஜ்தபா ஹூசேன் கொமெய்னி ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்ந்து கப்பல்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments