Trending

6/recent/ticker-posts

Live Radio

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை...!



இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைவணிகம்

அதன்படி, நேற்று (16) நிலவரப்படி நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாகவும், டெங்கு தொடர்பான 50 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 1,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்; அங்கு மொத்தம் 38,700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குள், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் (15,341 பேர்) பதிவாகியுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 14,625 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் 18,076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் இதுவரை ஒரு மாதத்தில் பதிவான அதிகளவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளது

அம்மாதத்தில் 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Post a Comment

0 Comments