Trending

6/recent/ticker-posts

Live Radio

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி...!



சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"ஒபெக் பிளஸ்" அமைப்பானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான எண்ணெய் உற்பத்தி இலக்குகளை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதால், உலகளாவிய ரீதியில் எண்ணெய்க்கான விநியோகம் அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போதைய சந்தை நிலவரத்தின்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 71.78 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 68.48 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments