
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் நேர ஒதுக்கீடு மற்றும் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
முற்பகல் 9.30 – 10.00: நிலையியற் கட்டளைகள் 22 இன் 1 முதல் 6 வரையான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்றக் காரியங்களுக்காக இக்காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக இக்காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 – 11.30: நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழான வினாக்களுக்காக இக்காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை, (188 ஆம் அதிகாரப் பிரிவின் கீழ் வரும்) தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு, பின்னர் அவற்றுக்கான நாடாளுமன்ற அனுமதி பெறப்படவுள்ளது.



0 Comments