
நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் குறித்து அறிவிப்பதற்காக 011 796 6366 என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், நீர் தேங்கும் பாத்திரங்கள், கழிவுகள், பழைய டயர்கள் போன்ற ஆபத்தான இடங்களை இந்த இலக்கத்தின் ஊடாக டெங்கு நிவாரண மையத்திற்குப் பொதுமக்கள் அறிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சுகாதார அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள் அனுப்பப்பட்டு உடனடி சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.



0 Comments