
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட போது, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை எவ்வித தாமதமுமின்றி முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கடந்த மாதம் 29 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டால், உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அன்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Comments