Trending

6/recent/ticker-posts

Live Radio

முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்...!



நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்பு சம்பவம் மற்றும் காயமடைந்தமை போன்ற நெருக்கடிகளுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையே காரணம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த சம்பவத்தில் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் இதற்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். நாட்டினுள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா?


சிறைச்சாலைகளுக்குள் குறிப்பிட்ட மனிதாபிமான ரீதியிலான நிர்வாகமொன்றை முன்னெடுக்க முடியாதது ஏன் என கேள்வி எழுப்புகிறேன். நாட்டு மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று அவசியமாகும். அரசாங்கத்திற்கு விரும்பியவாறு அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுவாக அமையாது,


இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு என்பது ஒரு பரந்த பார்வையைக் கொண்ட ஒரு விடயமாகும். கல்வி, பொருளாதாரம், சிறைச்சாலை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அனைத்தும் இதற்குள் அடங்கும். நேர்மையாக இருந்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments