Trending

6/recent/ticker-posts

Live Radio

#JUST IN : தலைநகர் டெல்லியில் பதற்றம் : சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு..!!



நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் விவசாயிகளும் தில்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.


தலைநகரில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் சிஆர்பிஎப் குழு வருகை போராட்டங்களின்போது வன்முறை, மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து சிஆர்பிஎப் குழு வரவழைப்பு என அதிகாரிகள் தகவல்

Post a Comment

0 Comments