Trending

6/recent/ticker-posts

Live Radio

“கடல் அலைகள் உயரக்கூடும்” : பொதுமக்களுக்கு எச்சரிக்கை...!!



கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2 முதல் 3 மீட்டர் வரை உயரமான கடல் அலைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், குறிப்பிடப்பட்டுள்ள அலை உயரம் கடலில் ஏற்படும் அலைகளின் உயரத்தையே குறிக்கிறது என்றும், அந்த அலைகள் கரையை அடையும்போது அவற்றின் உயரம் இதே அளவில் இருக்கும் என்று பொருளல்ல என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை, பேருவளை முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வந்து தாக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்துடன் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் சீற்றம் தொடர்பான எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல், பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments