நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் பெரும் சேதமடைந்துள்ளதாக காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேர அவசர உதவி இலக்கம் +977 9851048653 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



0 Comments