Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டின் சில பகுதிகளிலுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை...!!



நாட்டின் சில பகுதிகளில் நிலவக் கூடிய வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை (29) பகல் வேளையில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எனப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை மட்டத்திற்கு' (Caution Level) அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதன்போது, சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுதலும் வெளிப்புற நடவடிக்கைகளும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளில் செயற்படுவது தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மேற்கூறப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments