
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெருமளவில் மழையில்லாத வானிலையே நிலவக்கூடும்.



0 Comments