நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லவர்ஸ்லீப் (Loversleap) தோட்டத்தில் நேற்று (29) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நுவரெலியா, வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணாவார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில், கணவர் கோடரியால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments