Trending

6/recent/ticker-posts

Live Radio

துருக்கிய கடல் பிராந்தியத்தில் கப்பல்கள் மோதி விபத்து : 10 ஊழியர்கள் மாயம்...!!



துருக்கியின் இஸ்தான்புல் கடற்கரை பிராந்தியத்தில் சரக்கு கப்பலொன்று பிறிதொரு கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த சரக்கு கப்பல் நீரில் மூழ்கியதாகவும் அதிலிருந்து 10 ஊழியர்களைக் காணவில்லை எனவும் துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லின் புறநகர்ப் பிராந்தியமான சிலிவ்ரிக்கு தெற்கே 32 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மர்மரா கடலில் 295 அடி நீளமான துக்பெர்க் இமாமோக்லு என்ற மேற்படி சரக்கு கப்பல் துருக்கியக் கொடியுடன் பயணித்த 298 அடி நீளமான அல்ஸூ கப்பலுடன் மோதிய பின்னர் அந்தக் கப்பலின் ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துக்பெரிக் இமாமோக்லு சரக்கு கப்பலுக்கு சொந்தமான ஒரு மீற்றர் படகு மற்றும் பிற கப்பல் சிதைவுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ள போதும், அந்தக் கப்பலில் பயணித்த 10 ஊழியர்கள் தொடர்பில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று கடல்சார் விவகார பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துக்பெர்க் இமாமோக்லு கப்பல் எந்தவொரு அழைப்புகளுக்கும் பதிலளிக்காததாலும் அதிலுள்ள ஊழியர்களின் கையடக்கத் தொலைபேசிகளைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அந்தக கப்பல் நீரிழ் மூழ்கியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது என கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலில் பயணித்த கப்பல் தலைவர் உட்பட 10 ஊழியர்களும் துருக்கிழய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments