Trending

6/recent/ticker-posts

Live Radio

22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் - இன்றைய விசாரணைகள் ஆரம்பம்...!



அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை இன்று (02) இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த மனுக்கள்,பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணிகளின் வாதங்கள் நிறைவடைந்த பின்னர், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதா என்பது தொடர்பாக சட்டமா அதிபர் தரப்பு தனது வாதங்களை முன்வைக்கவுள்ளது.

நேற்று காலை ஆரம்பமான இந்த மனுக்களின் விசாரணை, இரவு 10.30 மணி வரை இடம்பெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Post a Comment

0 Comments