Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் இன்று 2 பிரம்மாண்ட பேரணிகள்...!



‘நமது அரசாங்கம்’ ‘ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி” எனும் தொனிப்பொருளில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்தப்படும் மக்கள் பேரணி தொடரின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான இரண்டு பிரதான பேரணிகள் இன்று (13) பிற்பகல் கஹட்டகஸ்திகிலிய மற்றும் நொச்சியாகம ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

முதலாவது பேரணி: இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கஹட்டகஸ்திகிலிய வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது பேரணி: இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சியாகம சிங்ஹாரகம விளையாட்டு மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments