
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை தண்டிப்பது அல்லது அவர்களை மன ரீதியாகத் துன்புறுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட வகையில் செயற்படுவது சிறுவர்கள் மீதான துன்புறுத்தலாகக் கருதப்பட்டு சட்டரீதியான தண்டனைக்கு உட்படக்கூடிய குற்றமாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மேலும் எச்சரித்துள்ளது.



0 Comments