
மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் கொழும்பு மேயருமான மொஹமட் முஸம்மிலின் மகனான மொஹமட் நிஷாம் ஜமால்தீன், நேற்று புதன்கிழமை (02) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் 1.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தின் மூலம் இலண்டன் நோக்கிப் புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த போதே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை அடிப்படையாகக் கொண்டே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மொஹமட் நிஷாம் ஜமால்தீன் 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காகப் பிற்பகல் 4.30 மணியளவில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நன்றி..!
virakesari



0 Comments