
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை நாட்டில் மொத்தமாக 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களில் 0.077 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 52,906 பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், இங்கு இதுவரை 21,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் 29,964 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், செப்டம்பர் மாதத்தில் 5,230 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாதத்தின் இதுவரை 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்நிலையில், நாடளாவியரீதியில் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.எனவே, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அழித்து, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments