
LO
இதன்போது, நாட்டின் தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்வுகூறல் தரவுகளை மேலும் விரிவாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றினால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள் தொடர்பான எதிர்வுகூறல் அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், குடிநீர், மின்சாரம் மற்றும் உணவுத் தேவைகளை முகாமைத்துவம் செய்வதுடன், வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களைப் புதுப்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வுகூறல் அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், களப் பணியாளர்களை அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகெதர, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



0 Comments