
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் பஸ் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது. எனினும், தற்போது பஸ் போக்குவரத்து தொழிலை நட்டத்திலேயே நடத்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய தூர சேவைகளில் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும், நெடுந்தூர சேவைகளில் நாளொன்றுக்கு 2,000 ரூபாவும் நட்டம் ஏற்படுகிறது.



0 Comments