Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

22 மாதங்களுக்கு பிறகு வெளியே இருந்த "டொனால்டு டிரம்ப்" உள்ளே!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. 

வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். 

இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர். டொனால்டு டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 48.2 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

அஸ்கர் அலி - பத்திரிகையாளர் 
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு 

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments