Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

5 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் நடிகர் விஜய்...!


நடிகர் விஜய் இன்று நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

நடிகர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக, புகைப்படம் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

எனினும், அண்மையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்ளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

அடுத்தடுத்த வாரங்களில், பிற மாவட்ட ரசிகர்களுடனும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments