Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்...!


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன் படி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் ஒரு ஆட்டத்தில் ஈகுவடார் - செனகல் அணிகளும், நெதர்லாந்து - கத்தார் அணிகளும் மோதுகின்றன. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் ஒரு ஆட்டத்தில் ஈரான் - அமெரிக்கா அணிகளும், வேல்ஸ் - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

Post a Comment

0 Comments