Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



'படித்தது 10 ஆம் கிளாஸ்... பார்த்தது டாக்டர் வேலை' - வசமாக சிக்கிய பெண்...!



மதுரையில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை எச்.எம்.எஸ் காலனி ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர். கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் பல்வேறு நோய்களுக்கு பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.



இந்த நிலையில் இவரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரேகாதேவி என்பவர் மதுரை மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளர் பாலசெந்தில் ஆகியோர் யோக மீனாட்சி வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் துறையினருக்கு மருத்துவ இணைய இயக்குனர் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் யோக சரஸ்வதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.



இவருடன் உதவியாளராக இருந்த சரஸ்வதி உள்ளிட்ட மற்ற பணியாட்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments