சுற்றுலா விசாவில் பணியாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காத 400 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களை ஒழுங்குபடுத்தும் பணியை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். சுற்றுலா விசாவில் வௌிநாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பி அது தொடர்பில் தகவல் வழங்காத 400 முகவர் நிறுவனங்களை இதுவரை தடை செய்துள்ளோம். மேலும், டொலராக தமது கொமிஷன் பணத்தை பெறாமல் உண்டியல் முறை ஊடாக பெற்ற சில நிறுவனங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கும் முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு ஏழரை இலட்சமாக இருந்தது, இன்னும் சில நாட்களில் 30 இலட்சத்திற்குதான் அனுமதி பத்திரம் வழங்கப்படும்.
0 Comments