சிவப்புக் கவுணி அதாவது சிவப்பு அரிசி தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று . சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் ஒன்று. அதில் உள்ள நன்மைகளை இங்கே படிட்யலிடுகிறோம்!
சராசரியான அரிசியின் விலை 1 கிலோ ரூ.40. ஆனால் சிகப்பு அரிசியின் விலையோ 1/2 கிலோவே ரூ.40. இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிற அளவுக்கு சிகப்பு அரிசிக்கான மதிப்புகளும் அதிகம்!
சிகப்பு அரிசி வரலாறு:
சிவப்புக் கவுணி அதாவது சிவப்பு அரிசி தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று. இது சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் ஒன்று. வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது இது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடியதும்கூட! இதில் அதிக அளவு ஆண்டி-ஆஸிடண்ட் உள்ளதால் மற்ற அரிசிகளை விட இது சிறந்ததாக உள்ளது.
சிகப்புக் அரிசியின் பயன்கள் மற்றும் அதுபற்றிய உண்மைகள்:
1. அக்காலத்தில் சிவப்பு அரிசியை உட்கொண்டவர்களுக்கு இதய நோய், நீரிழவு நோய் போன்ற நோய்கள் குறைவாக காணப்பட்டதாக கூறப்படுகிறது
2. நோயெதிர்ப்பு சக்திக்கு காரணமாக உள்ள ‘அந்தோசயனின்’ என்னும் மூலக்கூறு சிவப்பு அரிசிக்கு அந்நிறத்தை அளிக்கிறது
3. பொதுவாக சர்க்கைரை நோய் உள்ளவர்கள் சிவப்பு அரிசியை உட்கொண்டால் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
4. உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கு இது உகந்த ஒன்று. இதில் இருக்கும் புரதம், நார்சத்து ஆகியவை உடலில் உள்ள கொழுப்புகளை கரைய செய்து உடல் எடையயை குறைக்க உதவுகிறது
5. சிகப்பு அரிசி புற்று நோய்க்கு எதிராகவும், புற்று நோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடக் கூடிய தன்மையுடையது
சிசப்பு அரிசையை புட்டு, கொழுக்கட்டை, அடை , தோசை , சிகப்பு அரிசி கொழுக்கட்டை பாயாசம் போன்ற இனிப்பு வகை உணவாக குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் கொடுக்கலாம்
0 Comments