Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சாதாரண தரத்திற்கான பாடத்திட்டம் குறித்து புதிய தீர்மானம்...!


கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் ஊடாக பொதுக் கல்வியில் தகவல் தொழிநுட்பத்தை பிரதான பாடமாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நனோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளுடன் தகவல் தொழில்நுட்பத்தையும் கலந்து மாணவர்களுக்கு அறிவு மற்றும் தொழிநுட்பத்தை வழங்குவதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான வழியை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சம்பியன்ஸ் ஆஃப் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அறிவில் முன்னிலையில் உள்ள போதிலும், அந்த அறிவை நடைமுறையில் பயன்படுத்தும் செயற்பாடு இலங்கைக்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments