Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்! ஓட்டிங்கில் சிக்கிய பிரபலம்..!


பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிரடியாக வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வெளியேறிய போட்டியாளர்கள்

கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி, பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடங்கும் போது சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் பிக் பாஸ் ஆரம்பித்த முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று ஜிபி முத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாமினேஷனில் சிக்கி, வாரத்திற்கு ஒரு போட்டியாளர்கள் வீதம் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேறினார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் சற்று வித்தியாசமாக டபுள் எவிக்ஷனில் ஆயிஷா மற்றும் ராம் இருவர் வெளியேறினார்கள்.

இந்த வார வெளியேறும் போட்டியாளர்?

மேலும் பிக் பாஸ் வீட்டின் பத்தாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் நாமினேஷனில்அசீம், மணிகண்டன், ஏடிகே, ஜனனி, விக்ரமன், ரக்ஷிதா ஆகிய பிரபலங்கள் சிக்கியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்திலிருந்து அதிக தடவைகள் நாமினினேஷனில் சிக்கிய அசீம் இந்த வாரம் ரெட் கார்டுடன் வெளியேறுவார் என சக போட்டியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிக்பாஸ் ஒட்டிங்கில் அசீம் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதனை பார்க்கும் போது அசீம் இந்த வாரமும் சேவ் ஆவார் என தெள்ள தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஓட்டிங் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது மணிகண்டன் வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments