Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

காயத்ரி ரகுராம் வகித்த பதவியில் இசையமைப்பாளர் தினா நியமனம் - அண்ணாமலை அறிக்கை...!



பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்துவந்த பதவியிருந்து, அவர் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக இசையமைப்பாளர் தினா அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

நடன அமைப்பாளரும், நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம், பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி, காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.



இதனால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காயத்ரி ரகுராம், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைநீக்கம் செய்துவிட்டார்கள் என்றும், செல்வக்குமார் என்ற அறிவுசார் பிரிவின் துணைத் தலைவர் தன்னைக் குறிவைத்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்துள்ளநிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசையமைப்பாளர் தினாவும், மாநில துணைத் தலைவராக ஆனந்தன் அய்யாசாமியும் நியமனம் செய்யப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments