நாளாந்தம் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திருத்தங்களுடனான நேர அட்டவணை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் D.S.குணசிங்க குறிப்பிட்டார்.
புதிய திருத்தங்களுக்கு அமைய, சில ரயில்களுக்கான நிறுத்தும் இடங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன.
கரையோர மார்க்க ரயில் சேவைகளுக்கான நேர அட்டவணையில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், களனிவௌி மார்க்கத்தின் நேர அட்டவணையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
0 Comments