Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Tsunami: இன்றுடன் 18 ஆண்டுகள்…!



‘சுனாமி’ என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று சுனாமி குறிப்பிடப்படுகிறது.

அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும் ஆபத்தான அதிக அழிவை ஏற்படுத்த கூடிய பேரழிவு என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். கடலில் உள்ள நீரின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் அலைகளின் தொடர். தாக்குதலாக வெளிப்படும் சுனாமி பொதுவாக எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு அல்லது நீருக்கடியில் வெடிப்பு போன்ற பல காரணங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாரி சுருட்டி சென்றது நினைவிருக்கலாம். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனிடையே மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் திகதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments