Trending

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப் பொழிவு! 21 செல்சியஸ் குளிரால் இதுவரை 78 பேர் வரை உயிரிழப்பு...!


ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 70,000 கால்நடைகளும் குளிரில் உறைந்து உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களான கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது. குறிப்பாக கோர்
பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை ‘-21‘ பாகை செல்லியஸ் ஆகக் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் 78 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்தனர் எனவும் குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இப்பனிப்பொழிவானது மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம்
தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments