Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.93 கோடியாக உயர்வு…!


உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.78 கோடியாக அதிகரித்துள்ளது. 

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 247 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 9 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments