Trending

6/recent/ticker-posts

Live Radio

உச்சம் தொடும் மசகு எண்ணெய் விலை - மத்திய கிழக்கு போர் பதற்றம்...!



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களின் தாக்கத்தால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை இன்று மேலும் அதிகரித்துள்ளன.

உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.14 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதனுடன், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.037 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, உலக எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சந்தைகளில் நிலவி வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments