தெலியாகொன்னை வயோதிபச் சங்கத்தலைவர் ஜனாப் கபூர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இன்று மாலை இடம் பெற்ற பொதுக்கூட்டத்திற்கு குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்தார் .
இதன் போது நிகழ்வில் சமுகமளித்திருந்த முதியோர்களின் ஆசியுடன் எதிர்வரும் கால செயற்திட்டங்கள் சம்மந்தமாகவும் இங்கு ஆலோசிக்கப்படது. அஷார்தீன் நற்பணிமன்றத்தினூடாக 2023 ஜனவரி மாதம் பிறந்தநாளை கொண்டாடும் அங்கத்தவர்களுக்கு இங்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இவ்வருடத்தில் முதியோர் சங்கத்தில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து பெரியோர்களுக்கும் பரிசில்கள் அன்பளிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதுடன் சிரேஷ்ட உறுப்பினர்களும் இங்கு பாராட்டி கொளரவிக்கப்பட்டனர்.
0 Comments