Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



'உலக கோப்பைக்கு சரியான ரூட்லதான் போயிட்டு இருக்கோமா?' - முகம்மது ஷமி 'அசால்ட்' பதில்


செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகம்மது ஷமிவிடம், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை உருவாக்கும் பாதையில் இந்திய அணி சரியாக செல்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் முக்கியமான இரண்டாவது போட்டியானது, நேற்று ஜனவரி 21-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.



இப்போட்டியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகம்மது ஷமிவிடம், ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியை உருவாக்கும் பாதையில் இந்திய அணி சரியாக செல்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது .



அதற்குப் பதிலளித்த முகம்மது ஷமி, ''இந்திய அணி மீது மக்களுக்கு சந்தேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடந்த 4-6 ஆண்டுகளாக நல்ல முடிவுகளை வழங்கி வருகிறோம். இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உலகக் கோப்பைக்கு எங்களுக்கு நிறைய நேரம் உள்ளது. கைவசம் பல தொடர்கள் உள்ளன. சரியான வீரர்களை அறிந்துகொள்ள அதிக நேரம் உள்ளது. எனவே மேட்ச் டூ மேட்சில் எப்படி செயல்படப் போகிறோம் என்பதற்கான திட்டம் மட்டுமே எங்களிடம் உள்ளது'' என்றார்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments