பாணந்துறை பிங்வத்த டி. டீமன் சில்வா மாவத்தையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
காலி வீதியில் இருந்து கரையோர வீதியை நோக்கி பயணித்த சொகுசு ஜீப் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சொகுசு ஜீப்பில் பயணித்த வர்த்தகர் ஓட்டுநர் இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பத் குடாகொட என்ற குறித்த வர்த்தகர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கடவத்தை பிரதேசத்தில் மதுபான நிலையம் ஒன்றின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர்களைக் பிடிக்க பொலிஸ் குழுக்கள் சில ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவருக்கு பாணந்துறை பிங்வத்த டி. டீமன் சில்வா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடு ஒன்று உள்ளதாகவும், பிள்ளைகளை பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments