Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜனாதிபதி கொலை முயற்சி : பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை...!

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறான விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுதொடர்பான செய்திகள் குறித்து பொலிசார் தனித்தனியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விகிக்ரமசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த தனியார் வானொலி அலைவரிசையில் தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அரசியல் கட்சியொன்றுக்கு தொடர்புடையவர்கள் குழுவொன்று வெளிநாடு ஒன்றில் படுகொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக்கவும்குரித்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த வானொலி அலைவரிசை தெரிவித்திருந்தது.

நன்றி...
DAILY-CEYLON

Post a Comment

0 Comments