Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு...!


துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெறவுள்ளது.

இன்று (19) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தலைப்பிறை பார்த்த பின்னர் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறைக் கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூரப்படுகின்றது.

Post a Comment

0 Comments