ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் பொறியியல் பிரிவு வெளிநாட்டு விமான நிறுவனமான சிபு பசிபிக் ஏர்லைன்ஸின் ஏயர் பஸ் ஏ.330 (Airbus A330 (Trens 700)) விமானத்தின் முழு பராமரிப்பு பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் பொறியியல் துறையானது, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பரந்தளவிலான விமானங்களை பழுதுபார்ப்பதற்கும், முழுமையாகப் பராமரிப்பதற்கும் மற்றும் அறிக்கைகளை வழங்குவதற்கும் ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு முகாமையின் (ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை) பட்டயப் பிரதிநிதியாகச் செயற்படுகிறது.
அத்துடன், இவ்வருடத்தில் செரீன் ஏயார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு ஏயர்பஸ் ஏ330 விமானங்கள் இலங்கை விமானப் பொறியியல் பிரிவினரால் முழுமையாக பராமரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் முழுமையான பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அமெரிக்க டொலர் வருமானமும் கடந்த இரண்டு வருடங்களில் 35 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
0 Comments