Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



16 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் அரபுக் கல்லூரி மாணவர் விடுதி - வைபவ ரீதியாக திறந்து வைப்பு.

 

கள்-எலிய இஸ்லாமியப் பெண்கள் அரபுக் கல்லூரியில் சுமார் 16 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டிடமானது நேற்று (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடமானது குவைத் நாட்டின் பைத்துல் ஸஹாத் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பிலும், ஐ எஸ் ஆர் சி (ISRC) நிறுவனத்தின் அனுசரணையிலும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டு மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கள்-எலிய பெண்கள் அரபிபுக் கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர், கலாசாலை அதிபர், குவைட் நாட்டின் பைத்துல் ஸஹாத் நிறுவனத்தின் பணிப்பாளர், இலங்கைக்கான குவைத் தூதரக அதிகாரி, மற்றும் ஐ எஸ் ஆர் சி (ISRC) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments