Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு.


 கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையிலும் மீண்டும் கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெரஹராவில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பும் மக்களுக்காக கண்டியிலிருந்து மாத்தளை வரையிலும், கண்டியிலிருந்து நாவலப்பிட்டிய வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments