திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உடனடியாக கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செய்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று காலை குறித்த வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் சேதமடைந்துள்ளன.
ஆளுநரின் பணிப்புரை
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments