Trending

6/recent/ticker-posts

Live Radio

அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும்...!



அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் இன்று பீஜிங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பிராந்திய விவகாரங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

Post a Comment

0 Comments