முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை – பலஸ்தீன் உறவுக்கு அடித்தாளம் இட்டவர் என்றும், அன்றும் அவர் பலஸ்தீன் மக்களுடன் இருந்தார் என்றும் இன்று(20) பாராளுமன்றில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
“.. பலஸ்தீனத்துடன் எனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுக்கும் எனது குடும்பத்திற்கும் நெடுங்கால உறவுகளை கொண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது இலங்கை – பலஸ்தீன் உறவுக்கு அடித்தாளம் இட்டவர். அன்றும் அவர் பலஸ்தீன் மக்களுடன் இருந்தார். இலங்கை தலைவர் ஒருவரின் முன்னாள் தலைவர் ஒருவரின் இந்நாள் அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் உலகில் அடையாளமாக பதியப்பட்டிருப்பது என்றால் அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர்தான். அது பலஸ்தீனின் வீதி ஒன்றுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வெஸ்ட் பேங் பஜுதியில்.. அது தொடர்பில் கௌரவமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த யுத்தம் மத்திய கிழக்கினை மையமாகக் கொண்டு ஆரம்பித்தாலும், அது உலக நாடுகள் அனைத்திற்கும் எந்தவொரு விதத்திலாவது பாதிப்பு ஏற்படும். உக்ரேன் – ரஷ்யா யுத்தத்தின்போது எங்களது பொருளாதரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டது. அவ்வாறு தான் மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதும் அதனால் எமது நாட்டிற்கும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படலாம். எங்கள் அரசும் பாராளுமன்றமும் அதற்கான அவதானத்தினை செலுத்த வேண்டும். எப்போதும் நாம் ஏதும் விபரீதம் நடந்ததற்கு பின்னர் தான் அது தொடர்பில் அவதானம் செலுத்துகிறோம். அதற்கு மாறாக இன்று நாம் யோசிக்க வேண்டும்.
ஏராளமான நாடுகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. ஒரு
பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் மற்றுமொரு பக்கம் காஸாவுக்கும் ஆதரவாக களமிறங்குகின்றனர். அது சில நேரம் வன்முறையாக மாறும் சந்தர்ப்பங்களையும் நாம் கண்டோம். ஊடகங்களும் இதற்குப் பொறுப்பு.
காஸா – இஸ்ரேல் இடையே யுத்தம் என்றாலும் இன்று உலகமே அதையே பேசுகின்றது. இதனை பயங்கரவாத அமைப்புக்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள்…”
0 Comments