Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

படகு மூழ்கி 12 மாணவர், இரு ஆசிரியர்கள் உயிரிழப்பு...!


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாடசாலை சுற்றுலா சென்றவர்களை ஏற்றிய படகு ஒன்று மூழ்கிய விபத்தில் பன்னிரண்டு மாணவர்கள் மற்றும் இரு ஆசியர்கள் மூழ்கி பலியாகியுள்ளனர்.

வதோதராவில் உள்ள ஹார்னி ஏரியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் இடம்பெற்றன.

பதினெட்டு மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் மீட்கப்பட்டிருப்பதோடு அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாதபோதும் படகில் உச்சபட்ச அளவான 14 பயணிகளைத் தாண்டி அதிக அளவானவர்கள் நிரப்பப்பட்டிருந்ததாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகில் பயணித்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கி வழகப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments